UPDATED : அக் 12, 2015 12:00 AM
ADDED : அக் 12, 2015 10:48 AM
அ நிறம் | அளவு
குஜிலியம்பாறை
:
தளிப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் கால வெள்ளத்தால் அழிந்து வரும் பொம்மலாட்ட கலை
குறித்த கண்காட்சி வகுப்புகள் நடந்தன.
ஈரோடு மாவட்டம்
மொடக்குறிச்சி ஆசிரியர் தாமஸ் ஆண்டனி, இந்த காட்சியை,
அரசு பள்ளிகளில் நடத்தி வருகிறார். தன்சுத்தம்,
சுகாதாரம், பெண் கல்வியின் அவசியம், கல்லாமையை
இல்லாமை ஆக்குவோம் என்ற தலைப்புகளில் செயல் விளக்க காட்சிகளை, பொம்மலாட்டம் மூலம் மாணவர்களிடையே விளக்குகிறார்.
இரு பொம்மைகள் பேசுவது போல் செய்து காட்டினார். தளிப்பட்டி, ஆணை கவுண்டன்பட்டி, களத்தூர் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர்கள் சேல்வி, ராமசாமி, சுந்தரலிங்கம், திலகராணி, ஆசிரியர்கள் பிரடெரிக் ஏங்கல்ஸ், ராஜேஸ்வரி, மேகலா, தங்கராஜ் பங்கேற்றனர்.
