UPDATED : அக் 23, 2015 12:00 AM
ADDED : அக் 23, 2015 10:23 AM
காந்திகிராமம்
:
காந்திகிராம பல்கலை தமிழ்த்துறை சார்பில், திருக்குறளில் சமூக விழுமியங்கள் என்னும் தலைப்பில் நவ.,6, 7ல் தேசிய
கருத்தரங்கம் நடக்க உள்ளது.
தமிழ்த்துறை
பேராசிரியர் ராசரத்தினம் கூறியதாவது: திருக்குறளை மாணவர்கள் மனதில் பதிவு செய்ய,
பல்கலை மானியக்குழு இந்தியாவில் உள்ள அனைத்து
பல்கலைக் கழகங்களிலும் கருத்தரங்கு மற்றும் போட்டிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில் கல்லூரி மாணவர்களுக்கு வள்ளுவரின் கல்வியியல் சிந்தனைகள், திருக்குறள் காட்டும் வேளாண்மைச் சிந்தனைகள் என்ற தலைப்புக்களில் கட்டுரைப் போட்டிகள் நடக்க உள்ளன. பணியுமாம் என்றும் பெருமை, பண்பு பாராட்டும் உலகு என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி அக். 27ல் மாலை 3 மணியளவில் நடக்க உள்ளது. தொடர்ந்து நவ., 6, 7ல் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பங்கேற்கும் திருக்குறளில் சமூக உண்மைகள் என்னும் தலைப்பிலான 2 நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெறும். துணைவேந்தர் நடராஜன் தலைமை வகிக்கிறார்.
கருத்தரங்கில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில பல்கலைகளின் பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர் 94427 - 51031ல் தெரிவிக்கலாம், என்றார்.
