UPDATED : நவ 11, 2015 12:00 AM
ADDED : நவ 11, 2015 10:38 AM
பொள்ளாச்சி
: பொள்ளாச்சியில்,
உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு, திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
பயிற்சி அளித்தனர்.
திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், மாவட்ட அளவிலான நற்பண்பு கல்வி வகுப்பு குறித்த பயிற்சி முகாம் பொள்ளாச்சி பி.ஏ., கல்லுாரியில் நடந்தது. பி.ஏ., கல்லுாரிகளின் தாளாளர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். பி.ஏ., கல்வியியல் கல்லுாரி முதல்வர் செல்வின் முன்னிலை வகித்தார்.
திருமூர்த்தி
நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் திருஞானசம்பந்தம்
பேசியதாவது: சமூகம் மேம்பட, சமத்துவம் நிலைத்திட, எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் உருவாக, நாடும், வீடும் வளம் பெற நற்பண்புகள் எனும்
பூக்கள் எல்லா இடங்களிலும் உள்ள மனிதரின் மனங்களிலும் பரவி பூத்துக்குலுங்கிட
வேண்டும்.
பல்வேறு நற்பண்புகளை பற்றி மாணவர்கள் தானே உணரும் வண்ணம் தெரிந்து கொள்ளச் செய்தல், நற்பண்புகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் முறைகள் பற்றிய அறிவை மாணவர்கள் பெற உதவுதல், மாணவர்களிடையே மதிப்பு, பொறுமை, கீழ்படிதல் போன்ற நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள வழிகாட்டுதல் மற்றும் மாணவர்களுக்கிடையே நல்ல நடத்தையும், வாழ்க்கையையும் மற்றும் வாழ்க்கை முறையில் எளிமையையும் வகுப்பறையில் பயன்படுத்தச் செய்தல் உள்ளிட்டவை நோக்கமாக கொண்டு ஆசிரியர்களுக்கு இப்பயற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் அன்பு, நேர்மை, நாட்டுப்பற்று, ஒருமைப்பாடு உள்ளிட்ட நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். பாடத்துடன் இணைக்கப்பெற்ற நற்பண்புகள் பயிற்சி உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.
நீதி, விடுதலை, சம அந்தஸ்து மற்றும் சம வாய்ப்பு, சகோதரத்துவம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, நல்லிணக்கமும், சகோதரத்துவ உணர்வும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், அரசியல் சாசன அடிப்படை கடமைகள் குறித்து விளக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.திருமூர்த்தி நகர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் பாபி இந்திரா, ராஜா, விஜிலா, சாமிநாதன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். உயர் தொடக்க கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
