தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் கல்வித்தரம், தனித்திறன் மேம்பாடு

மாணவர் கல்வித்தரம், தனித்திறன் மேம்பாடு

மாணவர் கல்வித்தரம், தனித்திறன் மேம்பாடு


UPDATED : நவ 11, 2015 12:00 AM

ADDED : நவ 11, 2015 10:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2015 12:00 AM ADDED : நவ 11, 2015 10:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை
: தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் தனித்திறன்களை வளர்ப்பதில் உடுமலை
, சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முனைப்புடன் செயல்படுகிறது.

மாணவர்களுக்கு ஏற்ற தரமான கல்வி, தனியார் பள்ளிகளில் தான் கிடைக்கிறது என, பலரும் கருதுகின்றனர். அதை மாற்றும் வகையில், பல அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அவற்றில் உடுமலை, திருப்பூர் சாலையில் உள்ள சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் ஒன்று. 

இப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, 188 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த மூன்றாண்டுகளில், பெற்றோரின் கவனத்தை ஈர்த்து மாணவர்களுக்கு, ஆர்வத்தோடு கல்வி பயிலும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. 

கல்வியோடு கீபோர்ட், சிலம்பம், கராத்தே உட்பட தற்காப்புக் கலைகள், பரதம், பாண்ட் வாசித்தல் போன்றவைகளும் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகின்றன. மாணவர்களை ஒருங்கிணைத்து, நிதித்துறை, கல்வித்துறை என, துறை வாரியாக பிரித்து பொறுப்புகளை வழங்கியுள்ளனர். இப்பணிகளை, மாணவர்கள் உற்சாத்தோடு மேற்கொண்டு, ஆளுமைத் திறனையும் வளர்த்துக் கொள்கின்றனர். பள்ளியின் சுற்றுப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு, மாணவர்கள் பராமரிப்பது சுற்றுச்சூழல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது அறிவு சார்ந்த வினாக்களை தொகுத்து, தேர்வு நடத்தி ஊக்குவிக்கப்படுகின்றனர்.

பள்ளி தலைமையாசிரியர் இன்பகனி கூறுகையில், மாணவர்களுக்கு, சிறந்த கல்வியை கற்பிப்பது ஆசிரியர்களின் கடமை. எங்கள் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். புதிய செயல்பாடுகளை பள்ளிகளில் புகுத்துவதன் மூலம் மாணவர்களிடமும், புதிய சிந்தனைகளை கொண்டு செல்ல முடியும். சிறந்த பள்ளி என கல்வித்துறையில் மட்டுமின்றி, மக்களிடமும் பெயர் வாங்குவதே, ஒரு பள்ளிக்கு கிடைக்கும் பெருமை, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us