UPDATED : டிச 24, 2015 12:00 AM
ADDED : டிச 24, 2015 11:01 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி
:
கிருஷ்ணகிரி அடுத்த ஜாகீர்வெங்கட்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், கணித மேதை ராமானுஜத்தின், 128வது பிறந்த நாள்
கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த கணித கண்காட்சியை மாவட்ட கல்வி அலுவலர் அகமதுபாஷா துவக்கி வைத்தார். கணிதத்திற்கு ராமானுஜம் ஆற்றிய அர்ப்பணிப்பை நினைவு கூறும் வகையில், மாணவர்கள் செயல்முறை விளக்கத்துடன் கணித கருத்தரங்கம் நடந்தது. இதில், கணித விளையாட்டு, புதிர் கணக்கு, வேதகால கணித செயல்பாடு, வாழ்வியல் கணித திறன், கணித ஒப்படைவுகளுக்கு விடையளித்த விதம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை தாசிரப்பள்ளி, கே.ஏ.நகர் மற்றும் ஓபலேசப்பள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.
