தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/’டிஜிட்டல் இந்தியா’ இலவச பயிற்சி

’டிஜிட்டல் இந்தியா’ இலவச பயிற்சி

’டிஜிட்டல் இந்தியா’ இலவச பயிற்சி


UPDATED : டிச 28, 2015 12:00 AM

ADDED : டிச 28, 2015 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 28, 2015 12:00 AM ADDED : டிச 28, 2015 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா
 திட்டத்துக்கு தயாராகும் வகையில், சாய் கல்வி அறக்கட்டளை சார்பில், இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நிர்வாக நடைமுறையை கம்ப்யூட்டர் மயமாக்கும் வகையில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை, பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, வங்கி பண பரிவர்த்தனை, மின் கட்டணம் செலுத்துதல், சான்றிதழ் பெறுதல், மொபைல்போன் ரீ-சார்ஜ் உள்ளிட்ட சேவைகள் மற்றும் அரசுத்துறை சேவைகள் கம்ப்யூட்டர் மயமாகி வருகின்றன. இ-சேவை மையங்கள் மூலம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் நோக்கம், பயன் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பயன்பெறும் வகையில், திருப்பூர் சாய் கல்வி அறக்கட்டளை, இலவச பயிற்சி வகுப்பு நடத்துகிறது. 14 வயது முதல், 60 வயது வரையுள்ள அனைவரும், இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். இதில் சேர, ஆதார் அட்டை எண் அவசியம். தவிர, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் போன்ற ஏதேனும் ஒன்றின் நகலுடன், விண்ணப்பிக்கலாம்.

14 வயது பூர்த்தியடைந்த பள்ளி மாணவ, மாணவியர், அவரவர் பள்ளியிலேயே, இப்பயிற்சி பெறலாம். தினமும் இரண்டு மணி நேரம் வீதம், 10 நாட்களுக்கு பயிற்சி தரப்படும். மேலும் விவரங்களுக்கு, 97501 73999, 97506 73999, 0421 - 2262 727 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம், என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us