UPDATED : ஜன 13, 2016 12:00 AM
ADDED : ஜன 13, 2016 11:36 AM
அனுப்பர்பாளையம்
: திருப்பூர்,
ஆத்துப்பாளையம் ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி கண்காட்சி, நேற்று நடைபெற்றது.
இதனை, ஏ.வி.பி., கல்லூரி முதல்வர் முத்துசாமி, துவக்கி வைத்தார். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட தலைப்புகளில், மாணவ, மாணவியர் கண்காட்சியை அமைத்திருந்தனர். ஐந்து வகை நிலம், அதில் வாழும் உயிரினங்கள், அப்பகுதி மக்களின் தெய்வம் உள்ளிட்டவை, பார்வையாளர்களை கவர்ந்தது.
பாரம்பரிய உணவு வகைகளான கம்பு, சோளம், வரகு உள்ளிட்டவற்றை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மை குறித்து, மாணவியர் விளக்கினர். பழங்கால நாணயம், சேர, சோழ, பாண்டியர் கால நாணயங்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. மழைநீர் சேகரித்தல், சுற்றுச்சுழல் மாசுபாடு, மீன், பட்டுப்புழு, தேனீ வளர்த்தல் குறித்தும், மாணவர்கள் செயல்முறை யுடன் விளக்கம் அளித்தனர். தாளாளர் கார்த்தி கேயன், பள்ளி முதல்வர் வனிதாமணி, பெற்றோர் கல்வி கண்காட்சியை பார்வையிட்டனர்.
