தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி

பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி

பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி


UPDATED : ஜன 13, 2016 12:00 AM

ADDED : ஜன 13, 2016 11:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2016 12:00 AM ADDED : ஜன 13, 2016 11:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்
: காஞ்சிபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில்
, பெண் கல்வி, சுகாதாரம் குறித்த பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், ஆண்டு தோறும், பெண் கல்வி, சுகாதாரம் குறித்து பள்ளி மாணவர்களிடையே, பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டிற்கான போட்டிகள், பள்ளிகள் அளவில் நேற்று நடத்தப்பட்டது. அதில் முதல் பரிசு பெற்றவர்கள், ஒன்றிய அளவில் நடந்த போட்டியில் பங்கேற்றனர். 

ஒன்றிய அளவில், முதல், இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாவட்ட திட்ட இயக்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், 140 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பரிசு வழங்க, 2 லட்சம் ரூபாயை அரசு வழங்கியுள்ளது. விரைவில், மாவட்ட ஆட்சியர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us