தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறந்த எழுத்தாளர்களுக்கு இலக்கிய விருதுகள்

சிறந்த எழுத்தாளர்களுக்கு இலக்கிய விருதுகள்

சிறந்த எழுத்தாளர்களுக்கு இலக்கிய விருதுகள்


UPDATED : மார் 14, 2016 12:00 AM

ADDED : மார் 14, 2016 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2016 12:00 AM ADDED : மார் 14, 2016 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி
: சிறந்த எழுத்தாளர்களுக்கு இலக்கிய விருது கள் வழங்கப்பட்டன.

அரிமதி தென்னகன் இலக்கிய அறக்கட்டளை சார்பில் புதுச்சேரியை சேர்ந்த சிறந்த கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு அரிமதி தென்னக னார் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா, கருவடிக்குப்பம் ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

பள்ளி தாளாளர் கணே சன், நிர்வாக அதிகாரி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் சிறந்த கவிஞர் மற்றும் எழுத்தாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். கவர்னரின் தனிசெயலாளர் ஸ்ரீதரன் வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் பொன் பசுவதி, ஆறுசெல்வன், இளமுரு கன், பங்கஜம்மாள், தேவகி ஆனந்து, கிருஷ்ணகுமார், கலியபெருமாள், சிவசு, அசோகன், செல்வமணி. மதிவாணன் ஆகியோர் எழுதிய நுால்கள் சிறந்த நுால்களாக தேர்வுசெய்து விருதுகள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் சுந்தரமூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர் அய்யப்பன், அன்பழகன், அரிமதி அறவாழி மற்றும் அரிமதி இளவேங்கை ஆகியோர் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us