UPDATED : மார் 31, 2016 12:00 AM
ADDED : மார் 31, 2016 10:56 AM
அ நிறம் | அளவு
நாமக்கல்
:
தொ.ஜேடர்பாளையம் அரசு பள்ளிக்கு நுகர்வோர் விருது வழங்கப்பட்டது.
தமிழக அரசின், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம், ஆண்டு தோறும் நுகர்வோர் பாதுகாப்பு மாநில விருது வழங்கப்படுகிறது. கடந்த, 2013ம் ஆண்டுக்கான நுகர்வோர் பாதுகாப்பு விருதுக்கான மூன்றாம் பரிசு, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த தொ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.
விருதுடன், நற்சான்றிதழும், 5,000 ரூபாய் காசோலையும், சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.
