தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஊக்கத்தொகையுடன் இலவச தொழில் பயிற்சி

ஊக்கத்தொகையுடன் இலவச தொழில் பயிற்சி

ஊக்கத்தொகையுடன் இலவச தொழில் பயிற்சி


UPDATED : ஏப் 11, 2016 12:00 AM

ADDED : ஏப் 11, 2016 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 11, 2016 12:00 AM ADDED : ஏப் 11, 2016 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் ஊக்கத் தொகையுடன் இலவச தொழில் பயிற்சி நடக்கிறது.

வித்யாலய நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து இலவச தொழில் பயிற்சியை அளிக்கிறது. இதில், 18 வயதில் இருந்து, 35 வயதுக்கு உட்பட்டவர்கள் சேர்ந்து பயன் பெறலாம். இதில், சி.என்.சி., ஆப்ரேட்டர் டர்னிங், வெர்டிக்கல் மெஷினிங் சென்டர், ஆட்டோமோடிவ் சர்வீஸ் டெக்னீஷியன், ஆட்டோ பாடி டெக்னீஷியன், ரிப்பேர், பெயின்டர் ஆட்டோ பாடி, சோலார் மாடூல் அசெம்பளி டெக்னீஷியன் ஆகியவற்றுக்கு, 63 நாட்கள் முதல், 75 நாட்கள் வரை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

பயிற்சியாளர்கள் அனைவருக்கும் பாடப்புத்தகம், சீருடை, ஆய்வக சீருடை ஆகியன இலவசமாக வழங்கப்படும். மேலும், தினசரி, 100 ரூபாய் ஊக்கத்தொகை, சான்றிதழ் ஆகியன பயிற்சி முடிவில் வழங்கப்படும். நிறைவில் வளாகத்தேர்வு நடத்தி, அனைவருக்கும், 100 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்கப்படும். ஆட்டோமொடிவ் சர்வீஸ் டெக்னீஷியன் பயிற்சிக்கு எட்டாம் வகுப்பும், மற்ற பயிற்சிகளுக்கு, 10ம் வகுப்பும் படித்திருக்க வேண்டும்.

பயிற்சியாளர் சேர்க்கையின் போது மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கி பாஸ் புக் ஆகியவற்றின் அசல் மற்றும் நகலை கொண்டு வர வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 99444 84645 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us