UPDATED : ஏப் 12, 2016 12:00 AM
ADDED : ஏப் 12, 2016 11:09 AM
திண்டுக்கல்
: காந்திகிராமம்
மற்றும் மலேசிய செய்ன்ஸ் பல்கலைகள் சார்பில், விரிவாக்க பணிகளுக்கான தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பான
புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
காந்திகிராம கிராமிய பல்கலை துணைவேந்தர் நடராஜன் தலைமை வகித்து பேசுகையில், காந்திகிராம பல்கலை கிராம வளர்ச்சிக்கான தொழில்நுட்பங்களை கண்டறிந்து, அதனை கிராம மக்களின் குறிப்பாக விவசாயிகளின் பயன்பாட்டுக்கு வழங்கி வருகின்றது. தற்போது மலேசிய செய்ன்ஸ் பல்கலையும் இதனுடன் இணைந்துள்ளது என்றார். மலேசிய பல்கலை பேராசிரியர் ஹாஸ்லன் அபு ஹாசன் தலைமையில் அங்குள்ள பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
மலேசிய செய்ன்ஸ் பல்கலை பேராசிரியர் முத்தரசு தேவராஜ் கூறுகையில், எங்கள் பல்கலை மாணவர்கள் காந்திகிராம பல்கலைக்கு வந்து இங்குள்ள தொழில்நுட்பங்களை பயில உள்ளனர். காந்திகிராம பேராசிரியர்கள் செயின்ஸ் பல்கலைக்கு வந்து, அங்குள்ள தொழில்நுட்பங்களை கண்டு வர உள்ளனர்.
இதற்கான ஒப்பந்தம் 3 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும்.
இதனால் கிராம மக்களுக்கு பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது,
என்றார்.
