தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பனியன் நிறுவனங்களை நாடும் மாணவர்கள்

பனியன் நிறுவனங்களை நாடும் மாணவர்கள்

பனியன் நிறுவனங்களை நாடும் மாணவர்கள்


UPDATED : ஏப் 30, 2016 12:00 AM

ADDED : ஏப் 30, 2016 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2016 12:00 AM ADDED : ஏப் 30, 2016 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: கல்வி நிறுவனங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், குடும்ப பொருளாதாரச்சூழல் கருதி, பள்ளி மாணவர்கள் பலர், பனியன் நிறுவனங்களுக்குச் செல்ல துவங்கியுள்ளனர்.

பள்ளித்தேர்வு முடிந்து, தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. வெயிலும் கொளுத்தி வருவதால், மாணவர்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வசதி வாய்ப்புள்ளவர்கள், கோடை விடுமுறையின் போது, நீச்சல், யோகா, பாட்டு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வகுப்புகளுக்கு செல்கின்றனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள மாணவர்களோ, வறுமையை மனதில் கொண்டு, கோடை விடுமுறையின்போது, பனியன் நிறுவனங்களுக்கு பணிக்குச் செல்வர். பனியன் நிறுவனத்தில், ஒரு ஷிப்ட் பணியாற்ற, புதிய தொழிலாளர் எனில், 240 முதல், 280 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். அனுபவம் மற்றும் பணியின் தன்மையை பொருத்து, இது மாறுபடம்.

தற்காலிகமாக பணியில் சேர்ந்துள்ள பள்ளி மாணவர்களுக்கு, வயது மற்றும் அனுபவமின்மையை கருதி, ஷிப்ட் ஒன்றுக்கு, 150 ரூபாய் முதல், 170 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. எனினும், குடும்பச்சூழல் கருதி, இப்பணிகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us