UPDATED : மே 09, 2016 12:00 AM
ADDED : மே 09, 2016 10:59 AM
அ நிறம் | அளவு
ஈரோடு
:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தமிழகம் முழுவதும், 28 இடங்களில்,
மாணவ, மாணவியருக்கான,
28 விளையாட்டு விடுதிகள் உள்ளன.
இதில் கல்வியுடன், விளையாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான (2016-17) ஈரோடு மாவட்ட மாணவர்கள் சேர்க்கைக்கான, திறன் கண்டறியும் தேர்வு, ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் நேற்று நடந்தது.
இதில், 95 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்கள் திறன் பதிவு செய்யப்பட்டது.
