UPDATED : மே 21, 2016 12:00 AM
ADDED : மே 21, 2016 10:42 AM
புதுடில்லி
: ஊழல்,
லஞ்சத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும்,
சி.வி.சி., எனப்படும் மத்திய கண்காணிப்பு ஆணையம், இளைஞர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு உள்ளது. இதற்காக இளைஞர்களுக்கு, இன்டர்ன்ஷிப் எனப்படும், நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து,
ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஊழல், லஞ்சத்துக்கு எதிரான, சி.வி.சி.,யின் நடவடிக்கைகளில், இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுவர். நடப்பு ஆண்டில் இந்த திட்டம் துவங்கப்படும்.
ஒரு மாதத்துக்கான இந்த பயிற்சி, அதிகபட்சம், அடுத்த மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். பயிற்சி செலவாக, மாதத்துக்கு, 10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
இளங்கலை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், ஆராய்ச்சி மாணவர்கள் இதில் சேரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
