தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச நோட்டுக்களை ’சமாளிக்க’ ஏற்பாடு!

இலவச நோட்டுக்களை ’சமாளிக்க’ ஏற்பாடு!

இலவச நோட்டுக்களை ’சமாளிக்க’ ஏற்பாடு!


UPDATED : ஜூன் 01, 2016 12:00 AM

ADDED : ஜூன் 01, 2016 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 01, 2016 12:00 AM ADDED : ஜூன் 01, 2016 10:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு இன்று வழங்க வேண்டிய இலவச நோட்டுக்கள் வராததால், பழைய ஸ்டாக் நோட்டுக்களை வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று பள்ளிகள் திறக்கும் நாளில் இலவச புத்தகங்கள், நோட்டுக்கள், பேக்குகள் உட்பட மாணவர்களுக்கான அனைத்து அரசு திட்டங்களையும் வழங்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆனால், மதுரை மாவட்டத்திற்கான இலவச நோட்டுக்கள் மட்டும் வந்துசேரவில்லை. இதனால் பழைய ஸ்டாக் நோட்டுக்களை சேகரித்து, அனைத்து மாணவர்களுக்கும் தலா ஒரு நோட்டாவது வழங்கும் வகையில் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இணை இயக்குனர் ஆய்வு

இந்நிலையில் முதன்மை கல்வி அலுவலகத்தில், தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி கல்வி அதிகாரிகளுடன், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நலத்திட்டங்கள் குறித்து நேற்று ஆய்வு செய்தார். இயக்குனர் அறிவுறுத்தும் உரிய நேரத்தில் நலத்திட்டங்களை வழங்க அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கவேண்டும், என அறிவுறுத்தினார்.

முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us