தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்

கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்

கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்


UPDATED : ஜூன் 17, 2016 12:00 AM

ADDED : ஜூன் 17, 2016 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2016 12:00 AM ADDED : ஜூன் 17, 2016 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: அரசு
, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் நேற்று வகுப்புகள் துவங்கிய நிலையில் முதலாமாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் பூக்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கோவை மண்டலத்தில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி என, 108 கலைக் கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில் நடப்பு, 2016 - 17ம் கல்வியாண்டு இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை இம்மாதம் விறுவிறுப்பாக நடந்தது. அரசு கலைக் கல்லுாரிகளை பொறுத்தவரை கலந்தாய்வு முறையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். சில சுயநிதி கல்லுாரிகளில் சேர்க்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு ஏற்கனவே வகுப்புகள் துவங்கிய நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் துவங்கின. இந்நிலையில், சீனியர் மாணவர்கள், முதலாமாண்டு மாணவர்களை பூக்கொத்து கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர். சில கல்லுாரிகள் விழாக்கள் நடத்தப்பட்டு, முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us