UPDATED : ஜூன் 29, 2009 12:00 AM
ADDED : ஜூன் 29, 2009 02:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை மெஸ்டன் கல்வியியல் கல்லூரி, 1937ம் ஆண்டு மெஸ்டன் கல்வியியல் மற்றும் வளர்ச்சியியல் தொண்டு நிறுவனத்தால் துவக்கப்பட்டது. இக்கல்லூரியில் பி.எட்., எம்.எட்., எம்.பில்., மற்றும் பிஎச்.டி., ஆகிய பட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கல்லூரியில் பி.எட்., வகுப்பில் மாணவர்கள் மட்டுமே பயில அனுமதிக்கப் பட்டு வந்தனர். தற்போது இக்கல்லூரியில் பி.எட்., வகுப்பில் இக்கல்வியாண்டு முதல், மாணவிகளையும் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு, மெஸ்டன் நிறுவன தலைவர்கள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர். அரசு ஆணைப் படி, இந்தக் கல்வியாண்டு முதல், கவுன்சிலிங் மூலம் மாணவர்களுடன், மாணவியரும் இக்கல்லூரியில் சேரலாம்.