தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரியில் சுயதொழில் விழிப்புணர்வு முகாம்

கல்லூரியில் சுயதொழில் விழிப்புணர்வு முகாம்

கல்லூரியில் சுயதொழில் விழிப்புணர்வு முகாம்


UPDATED : செப் 05, 2018 12:00 AM

ADDED : செப் 05, 2018 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2018 12:00 AM ADDED : செப் 05, 2018 10:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மற்றும் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரியின் சுயதொழில் முனைவோர் மையம் சார்பில், மூன்று நாள் சுயதொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கல்லுாரி இயக்குனர் அன்பழகன் தலைமை வகித்தார்.

இதில், நாட்டின் வளர்ச்சியில் சுயதொழில் முனைவோரின் பங்களிப்பு, சுயதொழில் வாய்ப்புகள், திறன் மேம்பாடு, சந்தைப்படுத்துதல், டிஜிட்டல் மார்க்கெட்டிங், கூட்டு முயற்சி, படிக்கும் போதே சுயதொழில் வாய்ப்புகள், புதிய படைப்புகளின் அவசியம், வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், 9 தொழில்துறை வல்லுனர்கள் விளக்கம் அளித்தனர்.

மாணவர்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில், கேள்வி- பதில் நேரம் ஒதுக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், கே.பி.எம் பிளாஸ்டோ ரப்பர் நிறுவன தலைமை நிர்வாகி முத்துக்குமரன், கனரா வங்கி முன்னாள் அதிகாரி வணங்காமுடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us