தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளுக்கு இரவு காவலர்கள்

அரசு பள்ளிகளுக்கு இரவு காவலர்கள்

அரசு பள்ளிகளுக்கு இரவு காவலர்கள்


UPDATED : ஆக 24, 2020 12:00 AM

ADDED : ஆக 24, 2020 07:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2020 12:00 AM ADDED : ஆக 24, 2020 07:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
கிராமப்புற அரசுப்பள்ளிகளில், பொருட்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கு, உள்ளாட்சி நிர்வாகங்களின் சார்பில் இரவுக்காவலர்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்தில் மொத்தமாக, 188 துவக்க மற்றும் 46 நடுநிலை, 34 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், 25 அரசுப்பள்ளிகளைத் தவிர, மற்ற அனைத்து பள்ளிகளும் கிராமப்பகுதிகளில் தான் உள்ளன. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, இரவுக் காவலர்கள் நியமிக்கப்பட்டனர். அதிலும், ஒரு ஒன்றியத்தில், ஒருசில பள்ளிகளில் மட்டுமே அவ்வாறு நியமிக்கப்பட்டனர். 
மற்ற பள்ளிகளில் இரவுக்காவலர்கள் என யாரும் இல்லாததால், அரசுப்பள்ளிகள் அனைத்தும், விளையாட்டு மைதானங்களாகவும், சில நேரங்களில் மது அருந்திவிட்டு இளைப்பாறும் இடமாகவும் பயன்பட்டு வருகின்றன. இதனை கட்டுப்படுத்த, பள்ளியின் கண்காணிப்புக்கு, காவலர்கள் அவசியமென, சில பள்ளிகளில் ஆசிரியர்களால் சுய செலவில் இரவுக்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
இருப்பினும் பல பள்ளிகளில், அவ்வாறும் நியமிக்கப்படாமல் இருப்பதால், பள்ளியிலுள்ள தளவாடங்கள், பாதுகாப்பில்லாமல் உள்ளது. அரசின் மூலம், நியமிக்கப்படும் வரை, தற்காலிகமாக, இரவுக்காவலர்களை நியமிக்க, உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம், உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us