UPDATED : அக் 10, 2020 12:00 AM
ADDED : அக் 10, 2020 12:42 PM
அ நிறம் | அளவு
ஐதராபாத்
: ஆந்திராவில், பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை, சீருடை, புத்தகங்கள், நோட்டு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கும், கல்வி பரிசு திட்டம் அறிமுகமாகி உள்ளது.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், பொருளாதார நெருக்கடியால் பள்ளியில் இருந்து மாணவ, மாணவியரின் இடைநிற்றலை குறைப்பது மற்றும் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக, &'ஜெகனன்னாவின் கல்வி பரிசு&' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு புத்தகப்பை, மூன்று ஜோடி சீருடை, ஒரு ஜோடி, &'ஷூ&' மற்றும் புத்தகங்கள், நோட்டுகள், &'பெல்ட்&' ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
