தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொல்லியல் படிப்பில் தமிழ் சேர்ப்பு பிரதமருக்கு முதல்வர் நன்றி

தொல்லியல் படிப்பில் தமிழ் சேர்ப்பு பிரதமருக்கு முதல்வர் நன்றி

தொல்லியல் படிப்பில் தமிழ் சேர்ப்பு பிரதமருக்கு முதல்வர் நன்றி


UPDATED : அக் 10, 2020 12:00 AM

ADDED : அக் 10, 2020 12:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2020 12:00 AM ADDED : அக் 10, 2020 12:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தொல்லியல் துறை, முதுகலை டிப்ளமா படிப்புக்கான கல்வி தகுதியில், தமிழ் மொழியை சேர்த்ததற்கு, நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.
மத்திய தொல்லியல் துறை சார்பில், உத்தர பிரதேசத்தில், பண்டிட் தீனதயாள் உபாத்யாயா, தொல்லியல் கல்லுாரி செயல்படுகிறது. இக்கல்லுாரியில், தொல்லியல் முதுகலை டிப்ளமா படிப்பில், மாணவர்களை சேர்க்க, சமீபத்தில் கல்லுாரி நிர்வாகம் சார்பில், விளம்பரம் வெளியிடப்பட்டது. 
அதில், மாணவர் சேர்க்கைக்கு கல்வி தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகளில், பண்டைய அல்லது இடைக்கால இந்திய வரலாறு, தொல்லியல், மானுடவியல் ஆகியவற்றில் பட்டம் அல்லது சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் போன்ற செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளில், தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில், தமிழ் மொழி இடம்பெறவில்லை. 
இது குறித்து, பிரதமருக்கு முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதினார். இரண்டாண்டு தொல்லியல், முதுகலை டிப்ளமா படிப்புக்கான கல்வி தகுதியில், தமிழை சேர்க்க வேண்டும் என, வலியுறுத்தினார். அதை ஏற்று, தொல்லியல் முதுகலை டிப்ளமா படிப்புக்கான, கல்வி தகுதியில், தமிழ் மொழியை சேர்க்க, பிரதமர் உத்தரவிட்டார். அதற்கு நன்றி தெரிவித்து, முதல்வர் நேற்று, பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us