UPDATED : நவ 07, 2020 12:00 AM
ADDED : நவ 09, 2020 01:07 PM
தனித்துவம் நிறைந்த துறையாகவும், அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் துறையாகவும் விளங்கும், ‘போலார் சயின்ஸ்’ துறையில், இந்தியா மட்டுமின்றி பல வெளிநாடுகள், ஆர்டிக், அண்டார்டிகா, போன்ற கடல் பகுதிகளில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆய்வு செய்யப்படும் பிரிவுகள்
ஜியோலஜி, மிட்டிரோலஜி, ஸ்னோ ஸ்டடீஸ், ஜியோ மெக்னாடிசம், என்விரான்மெண்ட் சயின்ஸ், ஒய்டுலைப் பயாலோஜி, ஓசோனோகிராபி, ஓசோன் டிபிலிஷன், கிளைமேட் சேஞ்ச் உள்ளிட்ட பல பிரிவுகளில், ஆய்வுகளை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.
தகுதிகள்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், அறிவியல் துறை சார்ந்த பி.எஸ்சி., (ஜெனரல் சயின்ஸ், நேச்சுரல் சயின்ஸ், பயோலஜிகல் சயின்ஸ்)
எம்.எஸ்சி.,(வேதியியல், சுற்றுச்சூழல், புவியியல் அல்லது அதற்கு இணையான படிப்பு), எம்.டெக்.,(ரீமோட் சென்சிங் அண்ட் ஜி.ஐ.எஸ்., ஜியோ இன்பர்மேடிக்ஸ், என்விரான்மென்ட் இன்ஜினியரிங்), பி.ஜி., டிப்ளமோ இன் ரீமோட் சென்சீங் அண்ட் ஜி.ஐ.எஸ்.,, ஜியோ இன்பர்மேடிக்ஸ், பொல்யூஷன் கன்ட்ரோல், பிஎச்.டி., (புவியியல் சுற்றுச்சூழல் அல்லது அதற்கு இணையான படிப்பு) போன்றவற்றை படித்தவர்கள் இத்துறையில் எளிதில் நுழையலாம்!
வாய்ப்புகள்
இஸ்ரோ, ஜி.ஐ.எஸ்.,, இந்தியன் மிட்டிரோலஜிகல் டிப்பார்ட்மென்ட் (ஐ.எம்.டி.,), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓசோனோகிராபி (என்.ஐ.ஒ.,), நேஷனல் பியூரோ ஆப் பிளான்ட் ஜெனிடிக் ரீசோர்ஸ் (என்.பீ.பி.ஜி.ஆர்.,), சென்டர் ஆப் செல்லூலார் அண்ட் மாலிக்குலர் பயலாஜி (சி.சி.எம்.பி.,), இந்தியன் சென்டர் ஆப் ஓஷன் இன்பர்மேஷன் சர்வீஸ் போன்ற பல பொதுத்துறை நிறுவனங்களும் மற்றும் ஸ்ரீராம் இன்ஸ்டிடியூட், டெல்லி மற்றும் அமிட்டி பல்கலைக்கழகம், நொய்டா போன்ற தனியார் கல்வி நிறுவனங்களும் போலார் சயின்ஸ் துறையில் பெரும் பங்களித்து வருவதால் இந்நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்புகளை பெறலாம்.
அரசு மற்றும் தனியார் ஆய்வுக்கூடங்களில் அறிவியல் ஆய்வாளர், அறிவியல் சார்ந்த அமைப்புகள் அல்லது என்.ஜி.ஓ.,களில் அறிவியல் அதிகாரி, புவியியாளர், எழுத்தாளர், பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இத்துறையில் இருப்பதால், இத்துறையில் சாதிக்க தகுந்த பட்டப்படிப்பும், திறமையும் அவசியம்.
