UPDATED : நவ 17, 2020 12:00 AM
ADDED : நவ 17, 2020 06:31 PM
அ நிறம் | அளவு
சென்னை:
பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, துணை தேர்வு எழுதியவர்களுக்கு, இன்று அசல் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், செப்டம்பர், அக்டோபரில் துணை தேர்வு எழுதியவர்களுக்கு, இன்று அசல் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில், சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். இதில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, புதிய மதிப்பெண் சான்றிதழ் பின்னர் வழங்கப்படும். கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும். இவவாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
