தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு


UPDATED : டிச 31, 2020 12:00 AM

ADDED : டிச 31, 2020 03:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2020 12:00 AM ADDED : டிச 31, 2020 03:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஆன்லைன் தேர்வு நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், சிட்டி, பேரூர், பொள்ளாச்சி, எஸ்.எஸ்.குளம் ஆகிய, நான்கு கல்வி மாவட்டங்களில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், பாடவாரியாக நடத்தி முடிக்கப்பட்ட சிலபஸ், ஆன்லைன் மூலம் நடத்திய தேர்வு விபரங்கள் திரட்டப்பட்டன. பெரும்பாலான பள்ளிகளில், அதிகபட்சமாக 80 சதவீத மாணவர்கள், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது தெரியவந்துள்ளது.
ஆனால், பல பள்ளிகளில் ஆன்லைன் மூலம் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. சிலபஸ் முடிக்கும் நோக்கில், மாணவர்களுக்கு தொடர்ச்சியாக வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலை தொடர்ந்தால், தேர்ச்சி சதவீதம் குறையும் என்பதால்,இனிவரும் காலங்களில், தினசரி குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும், தேர்வு நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், &'இதுவரை நடத்தப்பட்ட பாடங்களை, சிறு சிறு பகுதிகளாக பிரித்து, தினசரி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, அவர்களின் கற்றல் நிலையை பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
விரைவில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகவுள்ள நிலையில், பாடத்திட்ட குறைப்புக்கு ஏற்ப, அந்தந்த பள்ளி ஆசிரியர்களே, மதிப்பெண் வாரியாக வினாவங்கி தயாரித்து, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது&' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us