தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.எட்., படிப்பில் சேர விண்ணப்பம்

எம்.எட்., படிப்பில் சேர விண்ணப்பம்

எம்.எட்., படிப்பில் சேர விண்ணப்பம்


UPDATED : ஜன 07, 2021 12:00 AM

ADDED : ஜன 07, 2021 07:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2021 12:00 AM ADDED : ஜன 07, 2021 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவரது அறிக்கை:

அரசு கல்வியியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டிற்கு, எம்.எட்., பட்டப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tngasaedu.in என்ற இணைய தளத்தில், இன்று முதல், வரும், 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.ஒரு கல்லுாரிக்கு விண்ணப்பம் பதிவு செய்ய கட்டணம், 2 ரூபாய்; விண்ணப்பக் கட்டணம், 58 ரூபாய் என, 60 ரூபாய் செலுத்த வேண்டும்.
எஸ்.சி., - எஸ்.டி., விண்ணப்பதாரர்களுக்கு பதிவுக் கட்டணம், 2 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது, தங்கள் விருப்ப வரிசைப்படி, கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும். தங்கள் சான்றிதழ்களையும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் விபரங்கள், இணையதளத்தில் உள்ளன. பதிவு செய்வதில் சிரமம் இருந்தால், 044 -- 2235 1014, 2235 1015, 2827 6791 என்ற எண்களில், காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அமைச்சர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us