தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வளர்கல்வி திட்ட மையங்கள் முடக்கம்

வளர்கல்வி திட்ட மையங்கள் முடக்கம்

வளர்கல்வி திட்ட மையங்கள் முடக்கம்


UPDATED : நவ 07, 2009 12:00 AM

ADDED : நவ 07, 2009 09:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2009 12:00 AM ADDED : நவ 07, 2009 09:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வளர்கல்வி புத்துயிர் பெற்றது. ஒன்றியந்தோறும் குறிப்பிட்ட மையங்கள் அமைக்கப்பட்டு, பராமரிப்பதற்காக தலைமை வளர்கல்வி பொறுப்பாளர்கள் மற்றும் மையப்பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைவரிடமும் படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதற்காக மையங்களில் நூலகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கல்வி கற்பித்தல் மட்டுமின்றி சமூக நல கணக்கெடுப்பு பணிகளும் வளர்கல்வி திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், செப்., முதல் தேசிய மகளிர் எழுத்தறிவு திட்டம் எனும் பெயரில் உருமாறிய நிலையில், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி உள்ளிட்ட இரு மாவட்டங்களில் மட்டும் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் செயல்படுத்தும் பணி தாமதவதால், வளர்கல்வி திட்டம் முடங்கியுள்ளது.

இந்நிலையில், வளர்கல்வி மையங்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் பீரோ, ஸ்டூல் போன்ற தளவாட பொருட்களை அருகிலுள்ள அரசுப்பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வளர்கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதிராஜா கூறியதாவது:

ஒவ்வொரு வளர்கல்வி நூலக மையங்களிலும் தலா 300க்கும் மேற்பட்ட கதை, பொது அறிவு புத்தகங்களும், பீரோ, அலமாரி, சேர் போன்ற தளவாடப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது திட்டம் செயல்பாடின்றி உள்ளதால் புத்தகங்கள், தளவாடப்பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டியுள்ளது.எனவே, அடுத்த திட்டம் குறித்த அறிவிப்பு வரும் வரை அருகிலுள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பொருட்களை ஒப்படைக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

திட்டம் மீண்டும் செயல்படத் துவங்கும்போது, பொருட்களை வாங்கிய குறிப்பிட்ட பொறுப்பாளர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மகளிர் தினத்தை முன்னிட்டு, இங்கு தேசிய மகளிர் எழுத்தறிவு திட்டம் செயல்படலாம். குறிப்பாக பள்ளிகளை மையப்படுத்தி திட்டம் மீண்டும் செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பொருட்களை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, ஜோதிராஜா தெரிவித்தார்.

ஆறு மாதங்களாக மைய பொறுப் பாளர்களுக்கு சம்பளமும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மையங்களுக்கும் ஆயிரக்கணக்கான ரூபாயில் வழங்கப்பட்டுள்ள புத்தகங்கள் அனைத்தும் நூலகம், பள்ளி வளாகம் என மாறி மாறி பந்தாடப்படுகிறது. மீண்டும் நூலகம் செயல்படும்வரை புத்தகங்களின் பராமரிப்பும், பாதுகாப்பும் கேள்விக் குறியாவதுடன், நிதியும் வீணாகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us