தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கான்பூர் ஐ.ஐ.டி., மாணவர்களின் செயற்கைகோள்

கான்பூர் ஐ.ஐ.டி., மாணவர்களின் செயற்கைகோள்

கான்பூர் ஐ.ஐ.டி., மாணவர்களின் செயற்கைகோள்


UPDATED : நவ 09, 2009 12:00 AM

ADDED : நவ 09, 2009 04:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2009 12:00 AM ADDED : நவ 09, 2009 04:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கான்பூர் ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ மாணவர்கள் சிறிய அளவிலான செயற்கைகோள் ஒன்றை தயாரித்து வருகின்றனர். வறட்சி, வெள்ளம், தாவர வளர்ச்சி முறைகள் மற்றும் காடுகள் ஆகியவற்றின் தற்போதைய தகவல்களை சேகரிக்க இது உதவும்.


இந்த செயற்கைகோள் தயாரிப்பு பணிகள் முடிந்த பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திடம் (இஸ்ரோ) ஒப்படைக்கப்பட்டு விரைவில் விண்ணில் ஏவப்படும்.


இந்த செயற்கைகோள் பற்றி ஐ.ஐ.டி., இயக்குனர் ஜி.தண்டே கூறுகையில் ‘நிலப் பரப்பின் தன்மை பற்றி புகைப்படங்களை அனுப்புவது இந்த செயற்கைகோளின் முக்கிய பணியாக இருக்கும். மேலும் வறட்சி, வெள்ளம், தாவரங்களின் வளர்ச்சி முறைகள் மற்றும் காடுகள் ஆகியவற்றை பற்றிய தகவல்களை இது சேகரிக்கும். பெரிய செயற்கோள்களை அனுப்பும் போது, அதனுடன் சேர்த்து விண்ணில் ஏவப்படவிருக்கிறது. செயற்கைகோளை தயாரித்து இஸ்ரோவிடம் ஒப்படைப்பதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டுள்ளோம். இதன் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் 20 மாணவர்கள் ஈடுபட்டனர். இந்த செயற்கோள் தயாரிப்பு பொன்விழா கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக உள்ளது.


பெரிய செயற்கைகோள்கள் 10,00 கிலோவுக்கும் அதிக எடை கொண்டது. இந்த செயற்கைகோள் 10 கிலோவுக்கும் குறைவான எடை கொண்டது. ஒரு சிறிய ‘எலக்ட்ரானிக்’ சாதனம் போல் இது காணப்படுகிறது. முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் பெரிய அளவிலான செயற்கைகோள்கள் தயாரிப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றன’ என்றார்.  அகர்வால் என்ற எம்.பில்., மாணவரின் தலைமையில், 20 மாணவர்கள் கொண்ட குழுவின் மூலம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த செயற்கைக் கோளுக்கு ‘ஜக்னு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிறிய அளவிலான செயற்கைகோள், ஒரு விதத்தில் ‘நேனோ’ தொழில்நுட்பத்துடன் தொடர்புடையது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us