தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கொரோனா கதாநாயகர்கள் மாணவர்களுக்கு போட்டி

கொரோனா கதாநாயகர்கள் மாணவர்களுக்கு போட்டி

கொரோனா கதாநாயகர்கள் மாணவர்களுக்கு போட்டி


UPDATED : ஏப் 14, 2021 12:00 AM

ADDED : ஏப் 14, 2021 09:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 14, 2021 12:00 AM ADDED : ஏப் 14, 2021 09:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு பள்ளி மாணவர்களுக்கு &'கொரோனா கால கதாநாயகர்கள்&' என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல் பரிசாக கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது. பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த கல்வி திட்டமான, &'சமக்ர சிக் ஷா&' திட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல், ஊட்டச்சத்து, ஆரோக்கியம் குறித்த போட்டிகளும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, கட்டுரை போட்டியும் நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கொரோனா கால கதாநாயகர்கள் என்ற தலைப்பில், மாணவர்கள் கட்டுரை எழுதி, அதை பள்ளி ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆசிரியர்களின், &'வாட்ஸ் ஆப்&' எண்ணிலும் அனுப்பி வைக்கலாம். இதில், முதல் பரிசாக, 7,000 ரூபாய் மதிப்புள்ள கையடக்க கணினியான &'டேப்லெட்&' வழங்கப்படும். இரண்டாம் பரிசாக, 4,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்; மூன்றாம் பரிசாக அறிவியல், &'கால்குலேட்டர்&' வழங்க வேண்டும் என, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us