தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில் நிறுவனங்களில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!

தொழில் நிறுவனங்களில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!

தொழில் நிறுவனங்களில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!


UPDATED : நவ 10, 2009 12:00 AM

ADDED : நவ 10, 2009 01:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2009 12:00 AM ADDED : நவ 10, 2009 01:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உள்நாட்டு சந்தை அதிகரிப்பு காரணமாக மட்டுமல்லாமல் வெளிநாட்டுச் சந்தையிலும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதால் மேலும் ஊழியர்களை புதிதாக நியமிக்கப் பல்வேறு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பொருளாதார தேக்க நிலை காரணமாக, புதிய வேலைவாய்ப்புகளில் இதுவரை ஏற்பட்டிருந்த தேக்கநிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது.


மாருதி நிறுவனம் 400 மாணவர்களைப் புதிதாகத் தேர்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் படித்தவர்கள், எம்.பி.ஏ., சி.ஏ., படித்தவர்களைப் பணிக்குத் தேர்வு செய்ய மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. கார் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில்,
ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஜூலையிலிருந்து செப்டம்பர் வரை 1,200 பேரை வேலைக்குத் தேர்வு செய்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த நிஷான் கார் நிறுவனம் சென்னைக்கு அருகே புதிய உற்பத்தி ஆலையைத் தொடங்க உள்ளதால், அடுத்த மே மாதத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையை 700லிருந்து 1,500 ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.


வெளிநாடுகளில் உள்ள பணியை இந்தியாவுக்கு மாற்றும் முடிவில் உள்ளதால் சிஸ்கோ நிறுவனம் இந்தியாவில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. எனவே, 12 ஆயிரம் புதிய ஊழியர்களை நியமிக்கவும் சிஸ்கோ தீர்மானித்துள்ளது.


இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஆயிரம் பேரைத் தேர்வு செய்த விப்ரோ நிறுவனம், அடுத்த ஆறு மாதங்களில் மேலும் 2 ஆயிரம் பேரைத் தேர்வு செய்ய உள்ளது. இந்தியாவிலும் வளைகுடா நாடுகளிலும் புதிய திட்டங்களை விப்ரோ பெற்றுள்ள சூழ்நிலையில், இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் ஏற்கெனவே பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தவும் அந்த நிறுவனம் திடடமிட்டுள்ளது.


ஐ கேட் என்ற அவுட் சோர்சிங் நிறுவனம் அடுத்த ஆண்டில் 1,500 பேரை புதிதாகத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. இன்போசிஸ் பி.பி.ஒ., நிறுவனம் இந்த நிதியாண்டின் இறுதியில் 1,500லிருந்து 2,000 பேர் வரை புதிதாகத் தேர்வு செய்யவும் திட்டமிட்டுள்ளது.


இதேபோல அடுத்த ஆண்டின் இறுதியில் 8 ஆயிரம் பேரைப் புதிதாகத் தேர்ந்தெடுக்க அக்சஞ்சர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டிவிடும். கடந்த டிசம்பரிலிருந்து 8,135 பேரைப் புதிதாகத் தேர்வு செய்துள்ளது காக்னிசன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம். கடந்த டிசம்பரிலிருந்து 7,800 பேரை டி.சி.எஸ்., நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us