தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.ஐ., பணி தேர்வில் முறைகேடு?

எஸ்.ஐ., பணி தேர்வில் முறைகேடு?

எஸ்.ஐ., பணி தேர்வில் முறைகேடு?


UPDATED : ஏப் 30, 2021 12:00 AM

ADDED : ஏப் 30, 2021 06:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2021 12:00 AM ADDED : ஏப் 30, 2021 06:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
போலீஸ் எஸ்.ஐ., பணிக்கான ஆட்கள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, தேர்வு எழுதிய, சென்னை சதீஷ், திருச்சி தங்கதுரை உள்ளிட்டோர், சென்னையில் அளித்த பேட்டி:


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, 2019ல், போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வு, நேர்காணல் என, மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, 969 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வேலுாரில் மட்டும் தொடர்ச்சியான பதிவு எண்ணுடன் தேர்வு எழுதிய, 144 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் கல்லுாரி ஒன்றில் தேர்வு எழுதியவர்கள், மாநில அளவில், முதல், இரண்டாம், ஆறு, ஒன்பதாம் இடங்களை பிடித்து உள்ளனர்.கூட்டமாக விண்ணப்பித்து, தொடர்ச்சியான பதிவு எண் பெற்று, ஒரே மையத்தில் தேர்வு எழுத வைக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது.
தேர்வர்களுக்கு முன், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் யார், அவர்களின் மொபைல் போன் எண் போன்ற விபரங்கள் பகிரப்பட்டன. இவர்கள் வாயிலாக எழுத்து தேர்வில் தில்லுமுல்லு நடந்துள்ளது.தேர்வு மையத்தில் மொபைல் போன் பயன்படுத்தி, தேர்வு எழுதப்பட்டுள்ளது. முறைகேடாக, 400க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேடுகள் குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். முறைகேடாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, தகுதியான நபர்களுக்கு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us