தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குழந்தைகள் பாதுகாப்பு: சோனியா வலியுறுத்தல்

குழந்தைகள் பாதுகாப்பு: சோனியா வலியுறுத்தல்

குழந்தைகள் பாதுகாப்பு: சோனியா வலியுறுத்தல்


UPDATED : மே 21, 2021 12:00 AM

ADDED : மே 21, 2021 08:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2021 12:00 AM ADDED : மே 21, 2021 08:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொரோனாவால் பெற்றோர்களை இழந்து சமூகத்தில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு, மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் இலவசமாக கல்வி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்&' என பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்., தலைவர் சோனியா கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனாவால், தாய் மற்றும் தந்தை என இருவரையும் இழந்த அல்லதுகுடும்பத்துக்கு வருமானத்தை ஈட்டித்தந்த தாய், தந்தை என இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தையும் தாண்டி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா தொற்றுக்கு ஒரே குடும்பத்தில் தாய், தந்தை என இருவருமே பலியாகிய கொடுமைகள் நடந்துள்ளன. இதனால் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கண்ணீர் கதைகள் இதயத்தை உலுக்குகின்றன. இனி, இவர்களுக்கு யார் உதவப் போகின்றனர் என்ற கேள்வியும் எழுகிறது.
இவர்களை ஆதரித்து உரிய கல்வி வசதியைத் தர வேண்டியதும், சமூகத்தில் எதிர்கால உத்தரவாதத்தை தர வேண்டியதும் நம் அனைவரது கடமை. நாடு முழுதும் உள்ள மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில், கொரோனா தொற்றுநோயால் தாய், தந்தை என பெற்றோர் இருவரையுமே இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
வருவாய் ஈட்டித் தந்த நபர் கொரோனாவால் உயிரிழந்து இருந்தால், அந்த குடும்பத்து குழந்தைகளுக்கு நவோதயா பள்ளிகளில் படிக்க வாய்ப்புத் தர வேண்டும். இவ்வாறு அதில் அவர் எழுதியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us