தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சிறப்பு திட்டம்
தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சிறப்பு திட்டம்
UPDATED : மே 21, 2021 12:00 AM
ADDED : மே 21, 2021 08:39 PM
பெங்களூரு:
&'&'மாணவர்களின் நலன் காக்கும், அரசு நிதியுதவி பெறாத தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள் சமுதாயத்தினருக்கு சிறப்பு சலுகைத் திட்டம் அறிவிக்க வேண்டும்,&'&' என தொடக்க, உயர்நிலைப்பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடியூரப்பாவுக்கு, அவர் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:
ஊரடங்கால் மாநிலம் முழுவதும், அரசு நிதியுதவி பெறாத, ஆயிரக்கணக்கான தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் பாதிப்படைந்துள்ளனர்.முந்தைய ஆண்டு வகுப்புகள் நடக்காததால், கட்டணம் செலுத்த மாணவர்களின் பெற்றோர், முன் வரவில்லை. இதனால், பள்ளிகளுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்ப்பட்டது. வருங்கால பிரஜைகளை உருவாக்கும், பணியில் ஈடுபட்டுள்ள, கல்வி நிறுவனங்கள், அரசுடன் கை கோர்த்துள்ளன.
பள்ளிகள் - பெற்றோர் இடையிலான பிரச்னையால் ஆசிரியர்கள், ஊழியர்கள் பாதிப்படைந்துள்ளனர். ஊதியம் கிடைக்காததால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், காய்கறி விற்றனர். நரேகா திட்டத்தின் கீழ், கூலி வேலைக்கு சென்றனர். இதை ஊடகங்கள் மூலம், நான் கவனித்தேன். கேள்விப்பட்டேன். இத்தகையோர் மீது அக்கறை காண்பிக்க வேண்டும். அவர்களின் உதவிக்கு செல்வது அரசின் பொறுப்பாகும்.
ஆசிரியர்களுக்கு செய்யும் உதவி பிள்ளைகளின் கல்வியை காப்பாற்றும். எனவே, அரசு நிதியுதவி பெறாத பள்ளி, கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கும், மாநில அரசு சிறப்பு சலுகை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
