தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.யு.சி., வகுப்புகளுக்கான சேர்க்கையை கல்வி நிறுவனங்கள் துவக்கம்

பி.யு.சி., வகுப்புகளுக்கான சேர்க்கையை கல்வி நிறுவனங்கள் துவக்கம்

பி.யு.சி., வகுப்புகளுக்கான சேர்க்கையை கல்வி நிறுவனங்கள் துவக்கம்


UPDATED : மே 21, 2021 12:00 AM

ADDED : மே 21, 2021 08:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2021 12:00 AM ADDED : மே 21, 2021 08:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருக்கும் நிலையில், முதலாண்டு பி.யு.சி., வகுப்புகளுக்கான சேர்க்கையை கல்வி நிறுவனங்கள் துவங்கியுள்ளன.
சி.பி.எஸ்.சி., பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், மாநில அரசின் சார்பில், அந்த வகுப்புக்கு தேர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், கர்நாடகாவில், பல கல்வி நிறுவனங்களில், முதலாண்டு பி.யு.சி., வகுப்பு சேர்க்கையை துவங்கி விட்டனர்.
கட்டணம் செலுத்துவதில் 50 சதவீதம் சலுகை அளிப்பதாக கூறி சேர்க்கையை கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. ஆனால் பணம் கட்டியதற்கான ரசீதுகள் எதுவும் பெற்றோருக்கு வழங்கப்படுவதில்லை.
தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், &'பள்ளிகளில் பெற்றோர் வந்து புகார் கூறுகின்றனர். முதலாண்டு பி.யு.சி., சேர்க்கை துவங்கி விட்டது. &'தங்களின் பிள்ளைகளுக்கு இன்னும் தேர்வு நடத்தப்படவில்லை என கூறுகின்றனர். இன்னும் சிலர் சில நிறுவனங்களில் வகுப்புகளே துவங்கி விட்டதாக கூறுகின்றனர்,&' என்றனர்.
துவக்க மற்றும் உயர்நிலை பள்ளி நிர்வாகத்துறை செயலர் சசிகுமார் கூறுகையில், &'&'பல நிறுவனங்களிலும் முதலாண்டு சேர்க்கைக்கான இடங்களை நிரப்பி விட்டதாக தகவல் வந்துள்ளது. சேர்க்கை குறித்து பெற்றோருக்கு சலுகை அளித்து இடங்களை நிரப்பி வருகின்றனர்,&'&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us