UPDATED : ஜூன் 08, 2021 12:00 AM
ADDED : ஜூன் 08, 2021 12:15 PM
சென்னை:
&'பள்ளிகளில், உளவியலாளர்களை பணியமர்த்த வேண்டும்&' என, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ., - எஸ்.எஸ்.பாலாஜி கடிதம் வழங்கினார்.
அவரது கடிதம்:
முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, பள்ளி கல்வித் துறையில், பல்வேறு தொடர் நடவடிக்கைகள் வாயிலாக, சீரமைப்பு செய்து வரும் தங்கள் நடவடிக்கை பாராட்டுக்குரியது. குறிப்பாக, மாணவர்கள் நலன், தேர்வு தொடர்பான முடிவுகளை எடுக்க, மக்கள் பிரதிநிதிகளோடு கருத்து கேட்பு என்பதோடு நின்று விடாமல், மருத்துவ நிபுணர் களையும் கலந்து பேசி முடிவெடுப்பது சிறப்பு.
பள்ளி கல்வியை மேம்படுத்தி, மாணவர் நலன் காக்கும் உயரிய எண்ணம் உடைய முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில், மாணவர் களுக்கான உளவியலாளர்களை, பள்ளிகளில் நியமனம் செய்தால், மிகச் சிறப்பாக அமையும்.
உளவியலாளர்களின் தொடர் கண்காணிப்பு வாயிலாக, மாணவர்களின் பொது உளவியல் நிலை, அந்தந்த சூழலில் அறிந்து கொள்ள உதவிடும். அதன் வாயிலாக, மாணவர்களின் திறன் பன்மடங்கு உயரும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
