தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவா கல்வியாளர்கள் கோவையில் வியப்பு

கோவா கல்வியாளர்கள் கோவையில் வியப்பு

கோவா கல்வியாளர்கள் கோவையில் வியப்பு


UPDATED : நவ 14, 2009 12:00 AM

ADDED : நவ 14, 2009 08:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2009 12:00 AM ADDED : நவ 14, 2009 08:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக ஆரம்பப்பள்ளிகளில் அறிமுகம் செய்யப் பட்டுள்ள செயல்வழிக் கற்றல்(ஏ.பி.எல்) முறை அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள் ளது.

இக்கல்வி முறையை தங்கள் மாநிலங்களிலும் அறிமுகம் செய்ய, அம்மாநில கல்வியாளர்கள் தமி ழக பள்ளிகளை பார்வையிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் கோவா மாநிலத்தை சேர்ந்த கேபிரியேல், டினோ, யுவத் ஆகிய மூன்று கல்வியாளர் குழுவினர் கோவை வந்தனர்.

பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள மயிலாடுதுறை, அரசூர், கம்மாளப் பட்டி, துறையூர் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஏ.பி.எல்., கல்வி முறையை பார்வை யிட்டனர். மாணவர்களின் வாசிப்புத் திறன், அடிப்படை ஆங்கிலத் திறன், கல்வி உபகரணங்களின் உதவியுடன் மாணவர்கள் எளிதாக கற்கும் விதத்தை கண்டு வியந்தனர். மாணவர்கள், ஆசிரியர்களுடன் புதிய கல்வி முறை பற்றி கலந்துரையாடி சந்தேகங்களை தீர்த்துக் கொண்டனர்.

இவர்களுடன் அனை வருக்கும் கல்வி இயக்கத்தின் கவுரவ ஆலோசகர் விஜயகுமார், மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் காளியப்பன், ஆசிரியர் பயிற்றுனர்கள் விஜயலட்சுமி, மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர். கோவா கல்வியாளர் குழுவினர் கூறுகையில், இங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன் ஆச்சரியம் அளிக்கிறது. அட்டைகளின் உதவியால் தானாகவே கற்கும் திறன், மாணவர்களின் தன்னம்பிக்கையையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தும் என்பதால், கோவா மாநில பள்ளி களிலும் இக்கல்வி முறையை அமல்படுத்துவது பற்றி யோசித்து வருகிறோம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us