தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அங்காடியில் பாடம் படித்த மாணவியர்

அங்காடியில் பாடம் படித்த மாணவியர்

அங்காடியில் பாடம் படித்த மாணவியர்


UPDATED : ஜூன் 21, 2021 12:00 AM

ADDED : ஜூன் 21, 2021 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2021 12:00 AM ADDED : ஜூன் 21, 2021 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சூர்:
கேரளாவில் பல்பொருள் அங்காடியில் பணியாற்றும் மாணவியருக்கு பாடம் படிக்க அனுமதி அளித்த உரிமையாளருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு கல்லுாரி மாணவியர், தங்கள் குடும்ப சூழல் காரணமாக, பல்பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். பி.எஸ்சி., பட்டப்படிப்பு படிக்கும் அனகா மற்றும், பிளஸ் 1 படிக்கும் அஸ்வதிக்கு, வகுப்புகள், &'ஆன்லைன்&' வாயிலாக நடந்து வருகின்றன.
இதனால் வேலையுடன், படிப்பிலும் ஒருசேர கவனம் செலுத்த முடியாமல் இவர்கள் தவித்து வந்தனர்.இந்நிலையில் அந்த பல்பொருள் அங்காடியின் உரிமையாளரான பிஜாய், அங்காடியில் இருந்தவாறு &'ஆன்லைன்&' வகுப்புகளில் கலந்துகொள்ள, அந்த மாணவியருக்கு அனுமதி வழங்கி உள்ளார்.அதற்காக அந்த மாணவியருக்கு, இரண்டு மணி நேரம் வழங்கி உள்ளார். வகுப்புகள் முடிந்ததும், படித்துவிட்டு வேலைப்பார்க்க அறிவுறுத்தியுள்ளார்.
கடையில் காலியாக உள்ள இடத்தில் அமர்ந்து, அந்த மாணவியர் ஆன்லைன் வாயிலாக பாடம் படித்து வருகின்றனர். அங்காடியின் உரிமையாளருக்கு, பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us