தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழில் அசத்தும் அசாம் மாணவர்கள்

தமிழில் அசத்தும் அசாம் மாணவர்கள்

தமிழில் அசத்தும் அசாம் மாணவர்கள்


UPDATED : டிச 03, 2009 12:00 AM

ADDED : டிச 03, 2009 12:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2009 12:00 AM ADDED : டிச 03, 2009 12:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்டுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக, அசாம், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மாணிக்கா எஸ்டேட்டில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குடும்பங்களும், முருகாளி எஸ்டேட் பகுதியில் அசாம் மாநிலத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட குடும்பங்களும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன. இவர்களின் குழந்தைகள், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் தமிழ் மொழியைப் பாடமாக படித்து வருகின்றனர்.
 
கல்யாணப்பந்தல் எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஏழு குழந்தைகள், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கின்றனர். தாய் மொழி இந்தியாக இருந்தாலும், தமிழ் படிப்பதில் இந்த மாணவர்களிடையே அதிக ஆர்வம் இருப்பதாகவும், எளிதில் பாடத்தைக் கற்றுக்கொள்வதாகவும் பள்ளித் தலைமை ஆசிரியர் அஜி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us