தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி வளாகத்தை பசுமையாக்கும் திட்டம்

பள்ளி வளாகத்தை பசுமையாக்கும் திட்டம்

பள்ளி வளாகத்தை பசுமையாக்கும் திட்டம்


UPDATED : டிச 03, 2009 12:00 AM

ADDED : டிச 03, 2009 06:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2009 12:00 AM ADDED : டிச 03, 2009 06:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு அதில் மாணவர்கள் தங்கள் பெயரை எழுதினால் மரம் வளரும் போது அவர்களது பெயரும் வளரும் என்று முதல்வர் வைத்திலிங்கம் பேசினார்.


தேசிய சுற்றுச்சுழல் மாதத்தை முன்னிட்டு தேசிய பசுமைப்படை சார்பில் பள்ளி வளாகத்தை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தில் காலியாக உள்ள இடங்களிலும், இட வசதி இல்லாத பள்ளிகளில் அருகில் உள்ள பாதுகாப்பான பொது இடங்களிலும் மரக் கன்றுகளை நட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின் துவக்க விழா லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளிக்கல்வி இயக் குனர் சுந்தரவடிவேலு தலைமை தாங் கினார். இணை இயக்குனர் கிருஷ்ணராஜ், கவுன்சிலர் பேட்ரிக் முன்னிலை வகித்தனர். முதல்வர் வைத்திலிங்கம் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு திட் டத்தை துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் தகவல் ஏடு புத்தகத்தை முதல்வர் வெளியிட அதனை பொதுப்பணித் துறை அமைச்சர் ஷாஜகான் பெற்று கொண்டார்.


காரைக்கால் ஜவகர்லால் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டலில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவி திவ்யாவிற்கு 20 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையை முதல்வர் வைத்திலிங்கம் வழங்கி பேசியதாவது: பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களின் பெயரை புதிதாக வரும் மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக இருக்கைகளில் எழுதுகின்றனர். இது அவர்களின் அறியாமையை காட்டுகிறது.அதற்கு பதிலாக நீங்கள் பள்ளி வளாகத்தில் ஒரு மரக்கன்றை நட்டு அதை பராமரித்து, அந்த மரத்தில் உங்கள் பெயரை எழுதுங்கள். அந்த மரம் வளரும் போது உங்கள் பெயரும் வளர்ந்து கொண்டே செல்லும். இவ்வாறு முதல்வர் பேசினார். மாநில பயிற்சி மைய சிறப்பு பணி அலுவலர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us