தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி வாகனங்களை கண்காணிக்கும் அதிகாரிகள்

பள்ளி வாகனங்களை கண்காணிக்கும் அதிகாரிகள்

பள்ளி வாகனங்களை கண்காணிக்கும் அதிகாரிகள்


UPDATED : டிச 09, 2009 12:00 AM

ADDED : டிச 09, 2009 01:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2009 12:00 AM ADDED : டிச 09, 2009 01:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சமீபத்தில் வேதாரண்யத்தில் நடந்த பள்ளி வேன் விபத்து பலரையும் வேதனைக்குள்ளாக்கியது. இதனால் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

பெரும்பாலான பள்ளிகள் சொந்த வாகனங்களை இயக்கி வருகின்றன. சிலவற்றில் வாடகை வாகனங்கள் இயங்குகின்றன. பெரும்பாலான வாகனங்கள் மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்கின்றன. அனுபவமற்ற டிரைவர்கள் ஓட்டுகின்றனர். எனவே பள்ளி வாகனங்களை மாநிலம் முழுதும் கண்காணிக்க அரசு உத்தரவிட்டது.


மதுரையிலும் ஆர்.டி.ஓ.,க்கள் செல்வகுமார், தாமஸ், பன்னீர் செல்வம் மற்றும் வாகன ஆய்வாளர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் சில வாகனங்கள் அதிகாரிகளிடம் பிடிபட்டுள் ளன. சில வாகனங்களில் தேவையான ஆவணங்களை வைத்திருக்கவில்லை. தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி வைத்திருக்கவில்லை. ஆட்டோக்களில் பக்கவாட்டு கம்பிகள் அமைக்கவில்லை.

வாகனத்தின் கதவு பூட்டப்பட வேண்டும். மாணவர்களை கவனித்துக் கொள்ள ஊழியர் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். இவை இல்லாத வாகனங்களை பிடித்து அபராதம் விதிக்கின்றனர். அதிகாரிகள் கூறுகையில், பள்ளி நிர்வாகங்களே இதில் கவனமாக இருக்க வேண்டும். ஆட்டோக்கள் பக்கவாட்டில் குழந்தைகள் தவறி விழுந்துவிடாமல் இருக்க கம்பிகளை வெல்டு செய்து வந்தால்தான் எப்.சி., அனுமதி தருகிறோம். பெற்றோரே அதிக குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் தங்கள் குழந்தைகளை ஏற்றி அனுப்புகின்றனர். இது தவறு என்ற விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை. என்றனர்.


மெட்ரிக்., பள்ளிகளின் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில் ஆய்வு செய்து நிர்வாகங்களிடம் குறைகளை சரிசெய்யும்படி தெரிவித்துள்ளோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us