தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.ஆர்.எம்., பல்கலையில் தேசிய கருத்தரங்கம்

எஸ்.ஆர்.எம்., பல்கலையில் தேசிய கருத்தரங்கம்

எஸ்.ஆர்.எம்., பல்கலையில் தேசிய கருத்தரங்கம்


UPDATED : டிச 12, 2009 12:00 AM

ADDED : டிச 12, 2009 07:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2009 12:00 AM ADDED : டிச 12, 2009 07:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்லூரி முதல்வர் சுப்புராம் வரவேற்றார். பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து தலைமை தாங்கி பேசுகையில், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில் பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வகங்கள் நவீனப்படுத்தப் பட்டுள்ளன என்றார்.

மும்பை ஆப்கைன் இன்ஸ்டிடியூட் இயக்குனர் அபய் சவுத்ரி பேசுகையில், ஆப்கைன் இன்ஸ்டிடியூட்டில் எச்1 என்1 மற்றும் எய்ட்ஸ் போன்ற உயிரி பாதுகாப்பு சம்பந்தமான ஆராய்ச்சிகள் துவங்கப்பட்டுள்ளன.பாம்பு விஷம் உள்ளிட்ட உயிரை கொல்லும் விஷத்தை முறிக்கும் மருந்துகளை கண்டறியும் ஆராய்ச்சியும் வெற்றிகரமாக நடந்து வருகிறது என்றார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத் தின் இயக்குனர் ஏ.கே.சிங் இக்கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில், இந்தியா சிறந்த திறன் கொண்ட நாடாகத் திகழ, அரசு, கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து இளைஞர்களை ஊக்குவிக்க முன்வர வேண்டும்.இளம் மைக்ரோ பயாலஜி ஆராய்ச்சியாளர்கள் உயிரி பாதுகாப்பு மற்றும் செயற்கை உணவு தயாரிப்பு தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சியை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.

கருத்தரங்கில் டாக்டர் அபய்குமார், எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் ராதா மாதவன், கணபதி, சென்னை மருத்துவக் கல்லூரி டாக்டர் லதா ஸ்ரீராம், சென்னை காசநோய் ஆராய்ச்சி மைய டாக்டர் வனஜா குமார், டாக்டர் மணிகண்டவேலு ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

பிரசிடென்சி கல்லூரியின் மைக்ரோ பயாலஜி உதவி பேராசிரியர் அருணகிரிநாதனுக்கு சிறந்த பேராசிரியர் விருதும் வழங்கப் பட்டது. நுண்ணுயிரியல் துறையிலும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பாலும், சுகாதாரத்தையும் புவியியலமைப்பையும் சீர்படுத்துவது குறித்து இக் கருத்தரங்கில், 45 நிறுவனங்களைச் சேர்ந்த 600 ஆராய்ச்சியாளர்கள் கட் டுரை சமர்ப்பிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us