தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மயில்வாகனன் நடராஜன் துணைவேந்தராக பொறுப்பேற்பு

மயில்வாகனன் நடராஜன் துணைவேந்தராக பொறுப்பேற்பு

மயில்வாகனன் நடராஜன் துணைவேந்தராக பொறுப்பேற்பு


UPDATED : டிச 12, 2009 12:00 AM

ADDED : டிச 12, 2009 07:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2009 12:00 AM ADDED : டிச 12, 2009 07:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது புதிய துணைவேந்தராக மயில்வாகனன் நடராஜன் பதவியேற்றார்.

இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: புதிதாக பொறுப்பேற்றுள்ள துணைவேந்தர், இங்குள்ளவர்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்ற வேண்டும். மருத்துவத் துறையில் பல பணி வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் அதை பயன்படுத்த வேண்டிய முறை குறித்து ஆசிரியர்கள் விளக்க வேண்டும். தமிழகத்தில் ஐந்து மருத்துவக் கல்லூரிகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. இதனால், மருத்துவத் துறை மேலும் வளர்ச்சியடையும். இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.

சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ் பேசியதாவது:மற்ற துறைகளில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ உடனே அந்த தேர்வுத் தாளை வாங்கிப் பார்க்கலாம். ஆனால், மருத்துவத் துறையில் அது சாத்தியமில்லை. தேர்வுத் தாளை பார்க்க மாணவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இதற்கு பல்கலைக் கழக துணைவேந்தர் முயற்சி எடுக்க வேண்டும். இந்தியாவின் சிறந்த பல்கலைக் கழகமாக மாற்ற துணைவேந்தர் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு சுப்புராஜ் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us