UPDATED : டிச 13, 2009 12:00 AM
ADDED : டிச 13, 2009 01:26 PM
இதுகுறித்த அமிர்தா விஸ்வ வித்யா பீடம் பல்கலையின் அறிக்கை: கோவை, எட்டிமடை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பல்கலை, சமூகப்பணித் துறை மற்றும் நாஸ்காம் பவுண்டேஷன் சார்பில், ஆற்றுப்படுத்துதலில் (கவுன்சிலிங்) சான்றிதழ் படிப்பை, டிச., 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்துகிறது.
இப்பயிற்சியில் பங்கேற்க, தன்னார்வ தொண்டு நிறுவனர்கள், சமூகப்பணித்துறை பட்டப்படிப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். டில்லி பரிவர்தன் மனநல மைய இயக்குனர் சுஜாதா சர்மா, மும்பை பிரேரனா அமைப்பு இயக்குனர் பிரவீண் பட்கர் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். அமிர்தா பல்கலை துணைவேந்தர் வெங்கட்ரங்கன் பயிற்சியை துவக்கி வைக்கிறார். இது குறித்த விவரங்களை, 98942- 21991, 99941- 84198 என்ற எண்ணிலும், email: msw@amirtha.edu என்ற இணையதளத்திலும் அறியலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
