தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேட் தேர்வு எழுதமீண்டும் வாய்ப்பு

கேட் தேர்வு எழுதமீண்டும் வாய்ப்பு

கேட் தேர்வு எழுதமீண்டும் வாய்ப்பு


UPDATED : டிச 18, 2009 12:00 AM

ADDED : டிச 18, 2009 01:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2009 12:00 AM ADDED : டிச 18, 2009 01:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை: கேட் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வெழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, புரோ மெட்ரிக் நிறுவனத்தின் இயக்குனர் சுமித்ரா ராய் தெரிவித்துள்ளார்.

நிர்வாகவியல் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் கேட் தேர்வில் சமீபத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து புரோ மெட்ரிக் நிறுவனத்தின் இயக்குனர் சுமித்ரா ராய் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புரோ மெட்ரிக் நிறுவனத்தால் நாடு முழுவதும் 11 நாட்கள் நடந்த கேட் தேர்வில், தேர்விற்காக 17 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் உபயோகப்படுத்தப்பட்டு, 361 தற்காலிக சோதனை மையங்களின் மூலம், 104 மையங்களில், 32 நகரங்களில் மாணவர்கள் தேர்வெழுதினர். இதுவரை நடைபெற்ற கம்ப்யூட்டர் சம்பந்தமான தேர்வுகளில் குறிப்பிட்ட காலத்திற்குள், தற்போது நடந்த தேர்வில் தான் அதிகமானோர் தேர்வெழுதியுள்ளனர்.


இந்த தேர்வின் துவக்கத்தில் சிறு தொழில்நுட்ப கோளாறினால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வெழுது வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு சுமித்ரா ராய் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us