தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஊட்டியில் மருத்துவ கல்லூரி அமையுமா?

ஊட்டியில் மருத்துவ கல்லூரி அமையுமா?

ஊட்டியில் மருத்துவ கல்லூரி அமையுமா?


UPDATED : டிச 27, 2009 12:00 AM

ADDED : டிச 27, 2009 03:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 27, 2009 12:00 AM ADDED : டிச 27, 2009 03:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இவர் ஏற்கனவே அறிவித்த திட்டங்களுடன், மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்டத்தையும் இம்முறை அறிவிக்க வேண்டும் என்பதே மலை மாவட்ட மக்களின் முக்கிய வேண்டுகோளாக உள்ளது.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், உள்ளாட்சித் துறை அமைச்சரான ஸ்டாலின், 2007ம் ஆண்டு மே மாதம் மலை மாவட்டத்துக்கு வந்தார். அவர் வந்த போது, 2,000க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்ட பிரம்மாண்ட அரசு நலத்திட்டம் வழங்கும் விழா, ஊட்டி எச்.ஏ.டி.பி., திறந்தவெளி மைதானத்தில் நடந்தது. அங்கு, பல திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

குறிப்பாக, 20 லட்சம் சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருகை தரும் ஊட்டியில், 24 மணி நேரமும் தண்ணீர் வரும் அளவுக்கு மூன்றாவது குடிநீர் திட்டம்; பார்க்கிங் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் கோடப்பமந்து கால்வாய் மீது தளம் அமைத்து வாகன பார்க்கிங் செய்யும் திட்டம்; கழிவுகள் மற்றும் குப்பை பிரச்னைக்கு தீர்வு கண்டு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த நடவடிக்கை;

ஊட்டி பஸ் ஸ்டாண்டை புறநகர்ப் பகுதிக்கு மாற்றி, நகரிலுள்ள நெரிசலைக் குறைக்கும் திட்டம் உட்பட 20க்கும் மேற்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.இதில், ஊட்டிக்கு அறிவிக்கப்பட்ட எந்த திட்டமும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மத்திய, மாநில அரசுகளால் பிற மாவட்டங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சுழற்சியான அரசு திட்டங்கள் மட்டுமே இதுவரை நீலகிரி மாவட்டத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய பெருநகரங்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற சிறப்பு பணிகள் ஏதும், உலக சுற்றுலா மையமாகத் திகழும் இம்மாவட்டத்துக்கு வழங்கப்படவில்லை என்பதும் வருத்தமான உண்மை.

குறிப்பாக, மலை மாவட்ட மக்களின் நீண்ட காலக் கனவான மருத்துவக் கல்லூரி, இதுவரை எந்த ஆட்சியாளர்களாலும் செயல்படுத்தப் படவில்லை. இங்கு சமவெளிகளைப் போல சிறந்த வசதிகளுடன் கூடிய மருத்துவமனை இல்லாததால், அடிக்கடி நிகழும் விபத்து காலங்களின் போதும், குளிர்காலங்களில் ஏற்படும் நோய்களின் போதும் போதிய சிகிச்சையின்றி இறக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

அவசர காலங்களில் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் நோயாளிகள், கோவை மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். நான்கு மணி நேர பயணத்துக்கு பின், கோவை கொண்டு செல்லப்படும் நோயாளிகள் பெரும்பாலும் இறந்து விடுகின்றனர். இந்த சிக்கலைத் தவிர்க்கும் வகையில், இங்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பதே 9 லட்சம் மக்கள் வாழும் நீலகிரி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் துணை முதல்வர் ஸ்டாலின், மருத்துவக் கல்லூரி திட்டம் உட்பட கிடப்பில் போடப்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிற திட்டங்களையும் மீண்டும் அறிவித்து, அதை விரைவில் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மலை மாவட்ட மக்களின் வேண்டுகோள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us