தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கைகொடுக்குமா கல்வித்துறையின் புதிய நடைமுறைகள்?

கைகொடுக்குமா கல்வித்துறையின் புதிய நடைமுறைகள்?

கைகொடுக்குமா கல்வித்துறையின் புதிய நடைமுறைகள்?


UPDATED : டிச 30, 2009 12:00 AM

ADDED : டிச 30, 2009 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 30, 2009 12:00 AM ADDED : டிச 30, 2009 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தனியார் பள்ளிகளில் நடத்துவதை போலவே, அரசு பள்ளிகளிலும் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடந்து வருகின்றன. தமிழக பள்ளி கல்வித்துறை, இந்தாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவும், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும் பல்வேறு புதிய நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. இதற்காக, பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி பயிற்சி அளிக்கப்பட்டது; தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களின் கல்வித்தகுதியை உயர்த்தி, தேர்ச்சி அடைய வைப்பது முக்கிய திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.


அதேபோல், கடந்தாண்டு அதிக சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரி யர்களை கொண்டு, குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுத்தந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.இதற்கு அடுத்தபடியாக, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு களில் மாணவ, மாணவியர் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற காரணமாக இருந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள், கல்வித்துறைக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் 60 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை சார்பில் ‘ஷோகாஸ்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்ட ஆசிரியர்கள், கருத்து அளிக்கும் கூட்டம், முதன்மை கல்வி அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இதேபோல், எதிர்வரும் காலங்களிலும், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்தால், அனைத்து ஆசிரியர்களும் பங்கேற் கும் கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த பயம் காரணமாக, இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என கல்வித்துறை எதிர்பார்க்கிறது.


இதுதவிர, அனைத்து அரசு பள்ளி களிலும், கடந்த ஒரு மாதமாக மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படு கின்றன. அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களிலும் வகுப்பு நடத்த பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. விடுமுறைக்கு பின் பள்ளிகள் செயல்பட துவங்கியதும், பிப்., வரை கூடுதலாக ஒரு மணி நேரம் பயிற்சி வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், ஜன., முதல் வாரத்தில் இருந்து மூன்று திருப்புத் தேர்வுகள் துவங்கப்பட உள்ளன.


தனியார் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் ‘சைக்கிள் டெஸ்ட்’ போல், அரசு பள்ளிகளில் ‘ஸ்லிப் டெஸ்ட்’ நடத்தப்பட உள்ளது. பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கு பின், விடப்படும் விடுமுறை தினங்களிலும், சிறப்பு வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, நடப்பாண்டில் புதிய பல நடவடிக்கைகளை கல்வித்துறை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவும், தேர்வில் மாணவர்கள் தோல்வியடைவதை குறைப்பதுமே முக்கிய நோக்கமாக உள்ளது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுக்கு பின், தொழில் சார்ந்த மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட மேல்படிப்பை தொடர்வதில், அரசு பள்ளி மாணவர்களை விட, தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளன.


சில அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக இருந்தாலும், 80 சதவீதத்துக்கு அதி கமாக மதிப்பெண் பெறுவதில் தனியார் பள்ளி மாணவர்களே அதிகம். மேலும், 30 சதவீதத்துக்கும் குறைவான அரசு பள்ளி மாணவர்களே தொழிற்கல்வியில், உயர்படிப்பை தொடர்கின்றனர். ஆகவே, தேர்ச்சி சதவீதத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மேல்படிப்புக்கு அரசு பள்ளி மாணவர்கள் நுழைவதற்கு ஏற்றவாறு செயல்பட்டால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.


சிறப்பு வகுப்புகளுக்கு ‘லீவு’: இந்தாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வருவதை விரும்பாத மாணவர்கள், பல்வேறு காரணங்களை கூறி விடுப்பு எடுக்கின்றனர். தற்போது, 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சிறப்பு வகுப்புகளில் பயின்று வருகின்றனர். வருகைப் பதிவு அவசியம் இல்லை என்பதால், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பயப்படுவதில்லை. ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தாலும், மாணவர்கள் ‘லீவு’ எடுத்துக் கொள்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us