UPDATED : ஜூன் 26, 2023 12:00 AM
ADDED : ஜூன் 26, 2023 09:53 AM
அ நிறம் | அளவு
சென்னை:
பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்புக்கான புன்னகை&' திட்டம், மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படுகிறது.தமிழக பள்ளிக்கல்வி துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு பல் பாதுகாப்புக்கான, புன்னகை திட்டத்தை, சென்னையில் துவங்கின. இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், மாணவர்களின் பற்களை பரிசோதித்து, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் சிகிச்சை குறித்து அறிவுறுத்தப்படுகிறது. இந்த திட்டம், வரும் மாதங்களில் மாநிலம் முழுதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
