தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., கவுன்சிலிங் தேதியில் மாற்றம்

இன்ஜி., கவுன்சிலிங் தேதியில் மாற்றம்

இன்ஜி., கவுன்சிலிங் தேதியில் மாற்றம்


UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM

ADDED : ஜூன் 27, 2023 06:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM ADDED : ஜூன் 27, 2023 06:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை ஜூலை 2ல் துவங்க திட்டமிட்டோம். ஆனால் மருத்துவ கவுன்சிலிங் ஜூலை மூன்றாம் வாரம் துவங்கலாம் என தெரிகிறது. மருத்துவ கவுன்சிலிங்குக்கு முன்பே இன்ஜினியரிங் சேர்க்கை வழங்கினால் மருத்துவத்தில் ஒதுக்கீடு பெறும் மாணவர்கள், இன்ஜினியரிங் இடத்தை விட்டு விட்டு சென்று விடுவர். அதன்பின் அந்த காலியிடத்தை ஓராண்டுக்கு நிரப்ப முடியாது. எனவே இடங்கள் வீணாவதை தடுக்க மருத்துவ கவுன்சிலிங்கின் முதல் சுற்று முடிந்த பின் இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூலை 2க்கு பதில் இரண்டு வாரங்கள் கழித்து இன்ஜினியரிங் கவுன்சிலிங் துவங்க வாய்ப்புள்ளது. முன்னிலை வரிசையில் இடம்பெற்றுள்ள 102 மாணவர்களில் 57 பேர் நீட் தேர்வு எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் தவிர அடுத்த நிலையில் உள்ள மாணவர்களும் நீட் தேர்வு எழுதியுள்ளதால் மருத்துவ கவுன்சிலிங் வரை இன்ஜினியரிங் சேர்க்கையை தள்ளி வைக்க வேண்டியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us