தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகம் மூன்றாமிடம் முதல்வரிடம் வாழ்த்து

தமிழகம் மூன்றாமிடம் முதல்வரிடம் வாழ்த்து

தமிழகம் மூன்றாமிடம் முதல்வரிடம் வாழ்த்து


UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM

ADDED : ஜூலை 01, 2023 06:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM ADDED : ஜூலை 01, 2023 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டுக்கான செயல்பாட்டில், இந்திய அளவில் தமிழகம் மூன்றாமிடம் பெற்றுள்ளது.டில்லியில் கடந்த மாதம் 7ம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் போட்டி நடத்தப்பட்டது. இந்திய அளவில் 260 மாவட்டங்கள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற 31 மாவட்டங்களில் தமிழகத்தில் உள்ள கோவை, திண்டுக்கல், மதுரை, பெரம்பலுார், சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருவள்ளூர், திருப்பூர், சிவகங்கை, நாமக்கல், திருச்சி, வேலுார் என, 13 மாவட்டங்கள், சிறந்த செயல்பாட்டிற்கான விருதுகளைப் பெற்றன. கோவை மாவட்டம் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டுக்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டுக்கான செயல்பாட்டில், இந்திய அளவில் தமிழகம் மூன்றாம் இடத்தை பிடித்தது. இதற்கான விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விருதுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். தலைமைச் செயலர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வேனா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us