UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM
ADDED : ஜூலை 01, 2023 05:48 PM
திருக்கோவிலுார்:
திருக்கோவிலூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வராண்டா மாணவர் சேர்க்கை 4ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது.திருக்கோவிலூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வராண்டா மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அடுத்த மாதம் 4ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கும், 5ம் தேதி மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 6ம் தேதி எஸ்.சி.,/ எஸ்.சி.ஏ.,/ எஸ்.டி.,/பிரிவினருக்கும், 7ம் தேதி தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் வராண்டா மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி முதல்வர் ரவிசங்கர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் காலை 9:30 மணிக்கு முன்னதாகவே கல்லூரியின் மாணவர் சேர்க்கை நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும். டவுன்லோட் செய்யப்பட்ட விண்ணப்பம், 10, 11, 12 ம் வகுப்பிற்கான மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ் அசல் மற்றும் இரண்டு நகல்கள், பாஸ்போர்ட் அளவு மூன்று புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அடையாள அட்டை நகல்களுடன், உரிய செயற்கை கட்டணத்தையும் எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
